கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் - அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் என்று அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் - அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

தென் ஆப்பிரிக்காவில் புதியதாக தோன்றிய கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் தற்போது இது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 89 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் தொடர்பான பயணங்களால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும். எனவே, தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com