சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

சுவீடனில் பிறந்த நிலா, தனது ஆரம்பகால குழந்தைப்பருவத்தை மராட்டியத்தில் அகமதுநகரில் கழித்தார்.
சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
Published on

சுவீடன் நாட்டில் கடந்த 13-ந்தேதி நடந்த பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகு தியில் பசுமைக்கட்சி சார்பில் மராட்டியத்தை சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகள் நிலா விகே பாட்டீல் (வயது 41) போட்டி யிட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் மிக முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த குடும்ப உறுப்பினர் ஆவார். ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளு பேத்தியும், மறைந்த மத்திய மந்திரி பாலசாகேப் விகே பாட்டீ லின் பேத்தியும் ஆவார். மேலும் தற்போதைய பா.ஜனதா மந்திரி ராதாகி ருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளும் ஆவார்.

பிரதமரின் ஆலோசகராக...

சுவீடனில் பிறந்த நிலா, தனது ஆரம்பகால குழந்தைப்பருவத்தை மராட்டியத்தில் அகமதுநகரில் கழித்தார். சுவீடனில் எம்.பி.ஏ. முடித்த இவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்த நாட்டின் பசுமை கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப் வென் அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைக்கான அரசியல் ஆலோசக ராக நிலா விகே பாட்டீல் பணியாற்றியுள்ளார்.

தனது வெற்றி குறித்து நிலா விகே பாட்டீல் கூறுகையில், “349 இடங் களை கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு 15 வயதாக இருக்கும்போதே மராட்டிய மாநில பட்ஜெட்டை படிக்க வைத்த என் தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் இன்று உயிரோடு இருந்திருந்தால் என் வெற்றியை கண்டு பெரு மைப்பட்டிருப்பார். இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார். சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைப்பிடித்து நூலிழையில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யாக தேர்வாகியிருப்பது மராட்டிய மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com