ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் கிடைத்ததால் அதிர்ச்சி!

ஜீன்ஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் கிடைத்ததால் அதிர்ச்சி!
Published on

லண்டன்,

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாதவர்கள் யாரும் இல்லை. அத்தியாவசியப் பொருட்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்வதற்கான வசதி மற்றும் குறைந்த விலை ஆகியவை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மக்களை ஈர்க்கும் காரணிகளாகும்.

ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில மறைக்கப்பட்ட ஆபத்துகள் உள்ளன. பலர் ஆன்லைனில் பணம் செலுத்தி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜீன்ஸ் ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் 'டெபாப்' என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் செகண்ட் ஹேண்ட் பேஷன் தளத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த இளம் பெண்ணுக்கு வெங்காயம் கிடைத்தது. ஆனால், சம்பவம் குறித்து சப்ளையர்களிடம் தெரிவித்தபோது, இது எப்படி நடந்தது என தெரியவில்லை என்று அவர் கூறியதாக அந்த பெண் கூறினார்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட பின்னர், அதேபோன்ற அனுபவத்தை சந்தித்த பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மறுபுறம், இனிமேல் ஆர்டர் செய்தால் வெங்காயம் தான் கிடைக்குமா என சிலர் கிண்டலான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com