லண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் கற்பழித்து கொலை: இந்திய கைதி, இங்கிலாந்துக்கு நாடு கடத்தல்

லண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், இந்திய கைதி ஒருவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.
லண்டனில் 10 ஆண்டுகளுக்கு முன் பெண் கற்பழித்து கொலை: இந்திய கைதி, இங்கிலாந்துக்கு நாடு கடத்தல்
Published on

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வால்தம்ஸ்டவ் பகுதியில், 2009-ம் ஆண்டு மிச்செல்லி சமரவீரா என்ற 35 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வீசப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அப்போது அங்கு மாணவர் விசாவில் சென்றிருந்த இந்தியரான அமன்வியாஸ் (35) மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டபோது அவர் இந்தியாவுக்கு வந்து விட்டார். இது தொடர்பான தகவலின் பேரில், அவர் டெல்லியில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல முயற்சித்தபோது 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிராக அமன்வியாஸ் சட்ட போராட்டம் நடத்தினார்.

முடிவில் அவரை இங்கிலாந்துக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கோர்ட்டு விசாரணையை எதிர்கொள்வார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com