உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ரஷிய கணவருக்கு அனுமதி தந்த பெண்...!

உக்ரேனியப் பெண்கள் ரஷியபடையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ரஷிய கணவருக்கு அனுமதி தந்த பெண்...!
Published on

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருந்த நிலையில், பல்லாயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. எனினும், இதனை ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. ஏப்ரல் 24ம் திகதி உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா தற்போது வரையிலும் தாக்குதல் நடத்தி வருகின்றது.

உக்ரேனியப் பெண்கள் ரஷியபடையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுகுறித்து உக்ரேனிய அதிகாரி ஒருவர் கூரும் போது

புச்சா நகரில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஆக்கிரமிப்பின் போது 14 முதல் 24 வயதுடைய சுமார் 25 சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வனமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் கர்ப்பமாக உள்ளனர்," என்று அவர் கூறினார்.

உக்ரேனிய குழந்தைகளை பெற்றெடுப்பதைத் தடுக்க, எந்த ஆணுடனும் உடலுறவு கொள்ள விரும்பாத அளவிற்கு யுக்ரேனிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோம் என்று ரஷிய வீரர்கள் கூறி வருவ்கிறார்கள்.

இந்த நிலையில் உக்ரேனிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் ரஷிய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தொலைபேசியில் அனுமதி தரும் ஆடியோ சில நாட்கள் முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த 30 நொடிகள் கொண்ட அந்த ஆடியோ வெளியானது.

இதுகுறித்து ஐரோப்பாவின் ரேடியோ பிரீ ஐரோப்பா/ ரேடியோ லிபர்ட்டி என்ற பத்திரிகை நடத்திய விசாரணையில் தொலைபேசியில் பேசியவர்கள் ரோமன் பைகொவோஸ்கி மற்றும் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என தெரிய வந்துள்ளது.

அவர்களுடைய தொலைபேசி எண்களை உக்ரைன் அதிகாரிகள் மூலம் பெற்ற பத்திரிகையாளர்கள் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருவருடைய புகைப்படங்களை கண்டுபிடித்தனர். இருவரும் உண்மையான கணவன் மனைவி தான் என்பதையும், ரோமன் பைகோவோஸ்கியின் தாய் உறுதி செய்தார். மேலும் ரோமன் ரஷிய ராணுவத்தில் பணி புரிவதாகவும் கூறினார்.

இதுகுறித்து ரோமனை அழைத்து பேசிய போது தற்போது அவர் சேவஸ்தோபோல் என்ற இடத்தில் இருப்பதாக கூறினார். அவரது மனைவியும் தனது கனவர் சேவஸ்தோபோலில் இருப்பதை உறுதி செய்தார். மேலும் தன் கணவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார். ஆனால் இருவரும் அந்த ஆடியோவில் பேசியது தாங்கள் தான் என ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் உக்ரேனிய அதிகாரிகள் இருவருடைய குரலும், ஆடியோவில் வெளியான குரலும் ஒரே போன்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ரஷிய படைகளின் தார்மீக பண்புகள் மட்டுமல்ல, அவர்களின் உறவினர்களும் பண்பாடற்றவர்களகவே உள்ளனர் எனவும், அவர்களில் 80 சதவீதம் பேர் தற்போது உக்ரைனில் போரை ஆதரிக்கின்றனர் என்றும் அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com