பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது - பிரிட்டன் நிதி மந்திரி

பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது - பிரிட்டன் நிதி மந்திரி
Published on

லண்டன்,

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும்ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கீர் ஸ்டார்மர் நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டனில் முதல் பெண் நிதி மந்திரியாக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரியாக பதவியேற்ற ரேச்சல் ரீவ்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

"நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன். மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.மந்திரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் லட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com