செவித்திறன் குறைபாடு குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை

2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
செவித்திறன் குறைபாடு குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை
Published on

ஜெனீவா,

இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு காரணங்களால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அடுத்த முப்பது ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1 மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும் என்றும் 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.

இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.

இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com