தடுப்பூசிக்கு ஒப்புதல் எப்போது ? பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் தரவுகளை கோரியது உலக சுகாதார அமைப்பு

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிப்பது மேலும் தாமதம் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிக்கு ஒப்புதல் எப்போது ? பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் தரவுகளை கோரியது உலக சுகாதார அமைப்பு
Published on

இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அதாவது, அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த அங்கீகாரத்தை பெறுவதற்காக கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஐதராபாத் நிறுவனம், கோவேக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது.

இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு விரைவில் அங்கீகாரம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கூடுதல் தரவுகளை அளிக்குமாறு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. இதனால், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு வட்டார தகவல்கள் கூறுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com