உலகம் புத்தர் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

உலகம் புத்தர் காட்டிய வழியை பின்பற்ற வேண்டுமென ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
உலகம் புத்தர் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி
Published on

டோக்கியோ,

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தோடு இந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்கிடையில், குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றும் 2-வது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். குவாட் மாநாட்டிற்கு முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜப்பானுடனான இந்தியாவின் உறவு ஆன்மீகம், ஒத்துழைப்பு, ஒன்று சேர்ந்தவை. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. வன்முறை, அராஜகம், காலநிலைமாற்றம் போன்ற சவால்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற உலகம் புத்தர் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com