

வாஷிங்டன்,
உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. 2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு 400 கோடியாக இருந்தது. அடுத்த 48 ஆண்டுகளில் மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக மக்கள் தொகை அதிகரித்தாலும், சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 2050 ஆம் ஆண்டு மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும்.
இருப்பினும் 2050 ஆம் ஆண்டு பூமியின் மக்கள்தொகை 900 கோடியாகவும் 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.