அமெரிக்காவில் உலக பேச்சு சாம்பியன் போட்டி : அரை இறுதியில் தமிழருக்கு 2–வது பரிசு

அமெரிக்காவில் உலக பேச்சு சாம்பியன் போட்டி 1938–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் நியூயார்க் நகரத்தின் சார்பில், தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் உலக பேச்சு சாம்பியன் போட்டி : அரை இறுதியில் தமிழருக்கு 2–வது பரிசு
Published on

வாஷிங்டன்,

நியூயார்க் நகரத்தின் சார்பில் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெயர் டாக்டர் ஹில் கிருஷ்ணனுக்கு கிடைத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள சிகாகோ நகரில் நடந்த அரை இறுதி போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணனுக்கு 2வது பரிசு கிடைத்தது. இவர் ஆஸ்திரேலியா, நைஜீரியா, சிங்கப்பூர், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த பேச்சாளர்களுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

இவர் நெல்லை மாவட்டம், வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, பின்னர் நியூயார்க் சென்று அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம் பெற்றார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்று உள்ளார். தற்போது நியூயார்க் நகரில் பரூச் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com