

ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு ஆண்டுகள் சென்று விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது.
இதனால், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கும் அமல்படுத்- தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.36 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 2.4 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.