மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி

விமானம் 1,100 அடி உயரம் வரை பறந்து தரை இறங்கியது.
மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி
Published on

நியூயார்க்,

முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான 'எக்ஸ்1'-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுவே தற்போது உலகின் மிகப்பெரிய பேட்டரியில் இயங்கக்கூடிய மின்சார விமானம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 30 பேர் அமரக்கூடிய வணிகரீதியான பயணிகள் விமானத்தை உருவாக்கி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com