உலகின் மிக நீளமான தொங்கு பாலம் துருக்கியில் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்கு பாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது.
image credit: ndtv.com
image credit: ndtv.com
Published on

துருக்கி,

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது. முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர் நேற்று திறந்து வைத்தனர்.

"1915 கனக்கலே பாலம்" அதன் கோபுரங்களுக்கு இடையே 2,023 மீட்டர் (6,637 அடி) இடைவெளியுடன்,உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக மாறும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

இது துருக்கியின் வடமேற்கு மாகாணமான கனக்காலேயின் ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள கெலிபோலு நகரத்தையும், ஆசியப் பக்கத்தில் உள்ள லாப்செகி நகரத்தையும் இணைக்கிறது. ஏஜியன் கடலை மர்மாரா கடலுடன் இணைக்கும் டார்டனெல்லை படகின் மூலமாக பயணிகள் கடக்க காத்திருப்பு என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் தேவைப்படிகிறது.ஆனால், தற்போது இந்த புதிய பாலத்தின் மூலமாக இந்த பயணமானது வெறும் ஆறு நிமிடங்களில் சாத்தியமாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com