ஆத்தாடி அவ்வளவு பெருசா...? உலகின் மிக நீளமான மலைப்பாம்பு கண்டுபிடிப்பு..!

இந்தோனேசியாவில் உலகின் மிக நீளமான ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆத்தாடி அவ்வளவு பெருசா...? உலகின் மிக நீளமான மலைப்பாம்பு கண்டுபிடிப்பு..!
Published on

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாம்புக்கு இபு பரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இபு பரோன் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. உலகின் மிக நீளமான பாம்பு இனமாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக 3 முதல் 6 மீட்டர் (10 முதல் 19 அடி) வரை நீளம் கொண்டவை. 20 அடிக்கு மேல் நீளமான பாம்புகள் மிகவும் அரிதானவை.

Also Read
காப்பி அடித்த மாணவர்கள்... உதவி செய்த ஆசிரியர்கள்... டிரோன் கேமராவில் சிக்கிய சம்பவம்
ஆத்தாடி அவ்வளவு பெருசா...? உலகின் மிக நீளமான மலைப்பாம்பு கண்டுபிடிப்பு..!

இபு பரோனின் நீளம் அதற்கு மயக்க மருந்து கொடுத்து எடுக்கப்படவில்லை என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை அதற்கு மயக்க மருந்து கொடுத்து அதன் உடல் முழுமையாக ஓய்வெடுக்கும்போது அளவீடு செய்தால் அது மேலும் 10 சதவீதம் நீளமாக 7.9 மீட்டர் வரை (26 அடி) இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவற்றின் அளவு மற்றும் வலிமை காரணமாக கால்நடைகளைக் கொல்லும் வலிமையான வேட்டைக்காரர்களாக உள்ளன. மேலும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், மனிதர்களையும் கொல்லும் திறன் கொண்டவை.

Also Read
சென்னை மாநகராட்சி ஒரே மாதத்தில் 248 டெண்டர்களை வெளியிட்டது எப்படி சாத்தியம்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
ஆத்தாடி அவ்வளவு பெருசா...? உலகின் மிக நீளமான மலைப்பாம்பு கண்டுபிடிப்பு..!

அதன் நீளத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு உறுதிப்படுத்திய நிலையில், எந்தக் காயமும் இன்றி அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மலைப்பாம்புகளால் மனிதர்கள், கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com