'போர்ப்ஸ் 30' சாதனையாளர்கள் பட்டியல்: உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனைக்கு இடம்

போர்ப்ஸ் 30 பட்டியலில் உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனை என அறியப்படும் அலிகா ஷ்மித் இடம்பெற்றுள்ளார்.
Image Instagrammed by alicasmd
Image Instagrammed by alicasmd
Published on

வாஷிங்டன்,

வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், தொழில்முனைவோர், தலைமைத்துவம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை மையமாகக் கொண்ட முன்னணி அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ், உலகின் 30 வயதிற்குட்பட்ட 30 சிறந்த தொழில்முனைவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனை என அறியப்படும் அலிகா ஷ்மித் இடம்பெற்றுள்ளார். 24 வயதாகும் இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பத்திரிகையான 'பஸ்டட் கவரேஜ்' இவரை "உலகின் கவர்ச்சியான தடகள வீரர்" என்று அறிவித்தது.

அதன் பிறகு இவரின் ரசிகர் பட்டாளம் பன்மடங்கு உயர்ந்தது. குறிப்பாக பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 30 லட்சம் பேர் பின்தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com