உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 11.04 கோடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,72,48,180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,04,26,941 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 58 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,63,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,792 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,19,89,157, உயிரிழப்பு - 5,76,298, குணமடைந்தோர் - 2,45,59,175

இந்தியா - பாதிப்பு- 1,36,86,073, உயிரிழப்பு - 1,71,089, குணமடைந்தோர் - 1,22,50,440

பிரேசில் - பாதிப்பு- 1,35,21,409, உயிரிழப்பு - 3,55,031, குணமடைந்தோர் - 1,19,57,068

பிரான்ஸ் - பாதிப்பு - 50,67,216, உயிரிழப்பு - 99,135, குணமடைந்தோர் - 3,10,934

ரஷ்யா - பாதிப்பு - 46,49,710, உயிரிழப்பு - 1,03,263, குணமடைந்தோர் - 42,72,165

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 43,73,343

துருக்கி - 39,03,573

இத்தாலி - 37,79,594

ஸ்பெயின் - 33,70,256

ஜெர்மனி - 30,21,064

போலந்து - 25,86,647

கொலம்பியா - 25,52,937

அர்ஜெண்டினா- 25,51,999

மெக்சிக்கோ - 22,80,213

ஈரான் - 20,93,452

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com