உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.14 கோடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,44,09,946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,14,27,765 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்து 63 ஆயிரத்து 504 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,80,18,677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,270 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 4,63,12,782, உயிரிழப்பு - 7,56,362, குணமடைந்தோர் - 3,60,52,614

இந்தியா - பாதிப்பு - 3,41,89,484, உயிரிழப்பு - 4,54,743, குணமடைந்தோர் - 3,35,59,649

பிரேசில் - பாதிப்பு - 2,17,29,763, உயிரிழப்பு - 6,05,682, குணமடைந்தோர் - 2,09,07,224

இங்கிலாந்து - பாதிப்பு - 87,73,674, உயிரிழப்பு - 1,39,533, குணமடைந்தோர் - 71,42,116

ரஷ்யா - பாதிப்பு - 82,41,643, உயிரிழப்பு - 2,30,600, குணமடைந்தோர் - 71,65,921

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 78,51,805

பிரான்ஸ் - 71,25,868

ஈரான் - 58,60,844

அர்ஜெண்டினா- 52,80,358

ஸ்பெயின் - 49,97,732

கொலம்பியா - 49,91,050

இத்தாலி - 47,41,185

ஜெர்மனி - 44,76,078

இந்தோனேசியா- 42,40,019

மெக்சிகோ - 37,81,661

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com