உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 46.20 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.48 கோடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,20,12,958 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,48,96,086 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,43,139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 60,73,733 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,12,44,936, உயிரிழப்பு - 9,92,302, குணமடைந்தோர் - 5,64,56,450

இந்தியா - பாதிப்பு - 4,29,98,646, உயிரிழப்பு - 5,16,103, குணமடைந்தோர் - 4,24,46,171

பிரேசில் - பாதிப்பு - 2,94,32,274, உயிரிழப்பு - 6,55,649, குணமடைந்தோர் - 2,79,68,811

பிரான்ஸ் - பாதிப்பு - 2,36,49,615, உயிரிழப்பு - 1,40,440, குணமடைந்தோர் - 2,23,27,799

இங்கிலாந்து- பாதிப்பு - 1,98,20,181 , உயிரிழப்பு - 1,63,095, குணமடைந்தோர் - 1,84,29,633

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ஜெர்மனி - 1,75,67,738

ரஷ்யா - 1,74,12,919

துருக்கி - 1,46,00,683

இத்தாலி - 1,34,89,319

ஸ்பெயின் - 1,12,60,040

அர்ஜெண்டீனா - 89,81,155

தென்கொரியா - 76,29,275

நெதர்லாந்து - 72,66,972

ஈரான் - 71,30,129

வியட்நாம் - 65,52,918

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com