உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்வு
Published on

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உச்சம் தொட்டுக் குறைந்தது. தற்போது 2-வது அலை பரவத்தொடங்கியதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விழி பிதுங்கி நிற்கின்றன.

இந்த நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 034 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 009- ஆக உள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,00,636 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 10,268,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com