

ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,00,23,397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,17,76,599 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 637 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 73 லட்சத்து 02 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 234 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 68,26,159, உயிரிழப்பு - 2,01,278, குணமடைந்தோர் - 41,03,090
இந்தியா - பாதிப்பு - 51,15,893, உயிரிழப்பு - 82,230, குணமடைந்தோர் - 40,22,049
பிரேசில் - பாதிப்பு - 44,21,686, உயிரிழப்பு - 1,34,174, குணமடைந்தோர் - 37,20,312
ரஷியா - பாதிப்பு - 10,79,519, உயிரிழப்பு - 18,917, குணமடைந்தோர் - 8,90,114
பெரு - பாதிப்பு - 7,44,400, உயிரிழப்பு - 31,051, குணமடைந்தோர் - 5,87,717