

ஜெனிவா,
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 76 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 84 ஆயிரத்து 031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 037 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 75 ஆயிரத்து 636 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - 56,12,011
பிரேசில் - 33,63,235
இந்தியா - 27,01,604
ரஷியா - 9,27,745
தென் ஆப்பிரிக்கா - 5,89,886
பெரு - 5,35,946
மெக்சிகோ - 5,22,162
கொலம்பியா - 4,76,660
சிலி - 3,87,502
ஸ்பெயின் - 3,82,142
ஈரான் - 3,45,450
இங்கிலாந்து - 3,19,197
சவுதி அரேபியா - 2,99,914
அர்ஜெண்டினா - 2,99,126
பாகிஸ்தான் - 2,89,215
வங்காளதேசம் - 2,79,144