உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34.98 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.81 கோடியை தாண்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34.98 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 34,98,23,678 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,81,42,285 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 6,60,71,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா- பாதிப்பு- 7,17,28,557, உயிரிழப்பு - 8,88,623, குணமடைந்தோர் - 4,43,29,200

இந்தியா - பாதிப்பு - 3,92,12,000, உயிரிழப்பு - 4,89,422, குணமடைந்தோர் - 3,65,39,609

பிரேசில் - பாதிப்பு - 2,39,60,207, உயிரிழப்பு - 6,22,979, குணமடைந்தோர் - 2,18,51,922

பிரான்ஸ்- பாதிப்பு - 1,63,90,818, உயிரிழப்பு - 1,28,514, குணமடைந்தோர் - 1,01,21,844

இங்கிலாந்து-பாதிப்பு - 1,57,84,488, உயிரிழப்பு - 1,53,787, குணமடைந்தோர் - 1,20,54,730

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 1,10,44,986

துருக்கி - 1,08,81,626

இத்தாலி - 97,81,191

ஸ்பெயின் - 89,75,458

ஜெர்மனி - 86,41,865

அர்ஜெண்டினா- 77,92,652

ஈரான் - 62,45,346

கொலம்பியா - 57,14,092

மெக்சிகோ - 46,46,957

போலந்து - 44,84,095

X

Daily Thanthi
www.dailythanthi.com