உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.72 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.12 கோடியை தாண்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்சும் உள்ளன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.72 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 18,72,41,651 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,12,24,530 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 42 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,19,74,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78,188 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,47,26,111, உயிரிழப்பு - 6,22,821, குணமடைந்தோர் - 2,92,34,930

இந்தியா - பாதிப்பு - 3,08,36,231, உயிரிழப்பு - 4,08,072, குணமடைந்தோர் - 2,99,67,478

பிரேசில் - பாதிப்பு - 1,90,69,003, உயிரிழப்பு - 5,32,949, குணமடைந்தோர் - 1,75,30,369

பிரான்ஸ் - பாதிப்பு - 58,08,383, உயிரிழப்பு - 1,11,321, குணமடைந்தோர் - 56,46,009

ரஷ்யா - பாதிப்பு - 57,58,300, உயிரிழப்பு - 1,42,253, குணமடைந்தோர் - 51,82,837

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 54,76,294

இங்கிலாந்து - 50,89,893

அர்ஜெண்டினா- 46,39,098

கொலம்பியா - 44,92,537

இத்தாலி - 42,69,885

ஸ்பெயின் - 39,37,192

ஜெர்மனி - 37,43,138

ஈரான் - 33,55,786

போலந்து - 28,80,755

மெக்சிகோ - 25,77,140

X

Daily Thanthi
www.dailythanthi.com