உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.09 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.60 கோடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,60,75,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,09,88,703 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18 லட்சத்து 59 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,32,27,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,708 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 2,13,38,777, உயிரிழப்பு - 3,61,932, குணமடைந்தோர் -1,26,79,775

இந்தியா - பாதிப்பு- 1,03,57,569, உயிரிழப்பு - 1,49,886, குணமடைந்தோர் - 99,75,340

பிரேசில் - பாதிப்பு - 77,54,560, உயிரிழப்பு - 1,96,591, குணமடைந்தோர் - 68,75,230

ரஷ்யா - பாதிப்பு - 32,60,138, உயிரிழப்பு - 58,988, குணமடைந்தோர் - 26,40,036

இங்கிலாந்து - பாதிப்பு - 27,13,563, உயிரிழப்பு - 75,431.

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் - 26,59,750

துருக்கி - 22,55,607

இத்தாலி - 21,66,244

ஸ்பெயின் -19,58,844

ஜெர்மனி - 17,92,199

கொலம்பியா - 16,86,131

அர்ஜென்டினா - 16,48,940

மெக்சிகோ - 14,48,755

போலந்து - 13,22,947

ஈரான்- 12,49,507

X

Daily Thanthi
www.dailythanthi.com