உலக அளவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
Published on

நியூயார்க்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் இன்று மேலும் 78,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,18,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் இன்று மட்டும் 2,652 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 4,00,098 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,86,289 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 19,76,515 பேர், உயிரிழப்பு - 1,11,716 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 6,51,980 பேர், உயிரிழப்பு - 35,211 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 4,58,689 பேர், உயிரிழப்பு - 5,725 பேர்) உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com