'ஜெராக்ஸ்' நிறுவனத்தின் சிஇஓ திடீர் மரணம்

‘ஜெராக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது 59-வது வயதில் உயிரிழந்தார்.
'ஜெராக்ஸ்' நிறுவனத்தின் சிஇஓ திடீர் மரணம்
Published on

வாஷிங்டன்,

ஒரு காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான நகல்கள் எடுக்க முடியும். இந்த நகலை எடுப்பதற்கு ஒளியை பயன்படுத்துவதால், இது ஒளி நகல் இயந்திரம் என்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒளி நகர் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது 'ஜெராக்ஸ்' ஆகும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது.

காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் எடுப்பதை இந்தியாவில் 'ஜெராக்ஸ்' எடுப்பது என பெரும்பாலான மக்களால் கூறப்படுகிறது. ஆனால், ஜெராக்ஸ் என்பதும் ஒளிநகர் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும்.

இதனிடையே, ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (சிஇஓ) ஜான் விசென்டின் (வயது 59) செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஜெராக்ஸ் நிறுவன சிஇஓ ஜான் விசென்டின் நேற்று உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விசென்டின் உயிரிழந்ததாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இடைக்கால சிஇஓ-வாக ஸ்வீவ் பிராண்ட்ரோஸ்வ் நியமிக்கப்படுவதாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com