ராணுவம் எந்த நொடியிலும் செயல்பட, போர் தயார்நிலையில் இருக்க வேண்டும் - சீன அதிபர் உத்தரவு

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் இராணுவம் 'எந்த நேரத்திலும் செயல்பட' தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார், மேலும் முழுநேர போருக்கும் தயார்நிலையில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
படம்: PTI
படம்: PTI
Published on

பீஜிங்

சீன அதிபர் ஜின்பிங் கையெழுத்திட்ட 2021 ஆம் ஆண்டில் மத்திய இராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எந்த நேரத்திலும் ராணுவம் செயல்பட தயாராக இருக்க வேண்டும். முழுநேர போருக்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . ராணுவ பயிற்சியை அதிகரிக்க வேண்டும்

ராணுவம் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ராணுவத்தில் புதிய கருவிகள் மற்றும் படை வீரர்களை இணைப்பதை அதிகரிக்க வேண்டும்.

ஜூலை 1 ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கபட்ட 100 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக மத்திய இராணுவ ஆணையத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்' என்று அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com