சீனாவில் தனது போட்டியாளர்களை அகற்ற அரசியல் ஒடுக்குமுறையை கையில் எடுக்கும் ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது போட்டியாளர்களை அகற்ற அரசியல் ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டு உள்ளார். லட்சக்கணக்கான் கட்சி உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
சீனாவில் தனது போட்டியாளர்களை அகற்ற அரசியல் ஒடுக்குமுறையை கையில் எடுக்கும் ஜி ஜின்பிங்
Published on

பீஜிங்

சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில், 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், ஆகஸ்ட் மாதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்டு உள்ள செய்தியின் படி லட்சகக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

"யான் திருத்தம் இயக்கம்" பாணி அரசியல் சுத்திகரிப்பு அதிபரால் ஜூலை 8 அன்று மத்திய அரசியல் மற்றும் சட்ட ஆணையத்தின் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. யான் திருத்தம் பிரச்சாரம் என்பது 1942 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தூய்மைப்படுத்தல் இயக்கம் ஆகும், இதில் யான் திருத்தம் பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான சீன கம்யூனிஸ்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கட்சியில் இருந்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் சீனாவின் தந்தை மாவோ சேதுங்கின் கொள்கையின் படி தங்கள் சிந்தனையை ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். கட்சி மற்றும் மாவோவின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல வேண்டாம், இல்லையெனில் அவர்கள் வெளியேற்றம், சித்திரவதை மற்றும் மரணத்தை கூட எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டது.

அதன்படி முதல் ஐந்து ஆண்டுகளில் 13.லட்சம் அதிகாரிகள் கடசியில் இருந்து நீக்கப்பட்டனர் கடந்த மாதம், ஜியின் நெருங்கிய உதவியாளரும், பொதுப் பாதுகாப்புக்கான மிக மூத்த துணை அமைச்சருமான வாங் சியாஹோங் அரசியல் ஒழுக்கம் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்.

ஜியின் ஆட்சியில் அரசியல் ஒடுக்குமுறை புதியதல்ல, ஏனெனில் அவர் 2012 ல் சிசிபி பொதுச் செயலாளரான பின்னர் தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை முநீக்கிவிட்டார்.

கொரோனா வைரஸ் வெடிப்பு, பொருளாதாரத்தை சீர்குலைத்தல் மற்றும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்களை தவறாகக் கையாள்வது தொடர்பாக சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டில் கால வரம்புகளை ரத்து செய்த போதிலும், அதிகாரத்தில் இருக்க ஜி ஜின்பிங் மேற்கொண்ட முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com