கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு


கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2025 3:49 AM IST (Updated: 18 April 2025 3:50 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

பகோட்டா,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

மேலும் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story