ஏமன் நாட்டின் பாதுகாப்பு படை முகாமுக்குள் ஏற்பட்ட மோதல்களில் 30 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டின் ஏடன் நகர அதிபர் மாளிகையினுள் உள்ள பாதுகாப்பு படை முகாமுக்குள் ஏற்பட்ட மோதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டின் பாதுகாப்பு படை முகாமுக்குள் ஏற்பட்ட மோதல்களில் 30 பேர் உயிரிழப்பு
Published on


* கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பெட்ரோல் ஆறாக ஓடியது. அந்த பெட்ரோலை சேகரித்து எடுத்துக்கொண்டு வருவதற்காக வாகனவோட்டிகள் விரைந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஏமன் நாட்டின் ஏடன் நகர அதிபர் மாளிகையினுள் பாதுகாப்பு படை முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமுக்குள் ஏற்பட்ட மோதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

* மியான்மர் நாட்டில் பலத்த மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலியாகினர். 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ரஷிய நாட்டின் ஆர்க்டிக் கடற்படை சோதனை தளத்தில் ராக்கெட் என்ஜின் சோதனையின்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதை ரஷிய அணு சக்தி நிறுவனம் ரோசாடோம் உறுதி செய்தது.

* அமெரிக்க தொழில்நுட்பத்தை சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்கு கடத்த முயற்சித்ததாக ஈரான் நாட்டை சேர்ந்த நேகர் கோட்ஸ்கனி என்ற பெண் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரணையின்போது அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com