ஏமன் அதிபர் மாளிகை மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி

ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி
Published on: 

ஏடன்,

ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் டிரோன் மூலமாக பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாளிகை அருகே அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்ட ஏமன் அரசின் தற்காலிக தலைமையகமாக விளங்கும் அல்-மாஷிக் அதிபர் மாளிகையை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் கொடூர தாக்குதலில் அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்தபோது ஏமன் நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் மாளிகை வளாகத்திற்குள் இல்லாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிபர் மாளிகைக்குள் சவுதி அரேபியாவின் ராணுவ நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம், ஆயுதக் கிடங் குகள் செயல்பட்டு வந்ததால், அதனைக் குறிவைத்தே இத்தாக்குதலை நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com