இம்ரான் கான் பிரதமராகாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக இருந்திருக்கும்- கடுப்பேத்தும் முன்னாள் மனைவி

இம்ரான் கான் பிரதமராகாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக இருந்திருக்கும் என அவரது முன்னாள் மனைவி ரெஹாம் கான் கூறி உள்ளார்.
இம்ரான் கான் பிரதமராகாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக இருந்திருக்கும்- கடுப்பேத்தும் முன்னாள் மனைவி
Published on

லண்டன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.

இம்ரான் கான் தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணி கட்சிகள் இரண்டும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்து விட்டன.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது குறித்து இந்தியா டுடே செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் ரெஹாம் கான் கூறியதாவது:-

இம்ரான் கான் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் அறிவுரைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர் அறிவுரைக்கு செவிசாய்த்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அவருடன் இருந்திருப்பேன். ஒருவேளை மற்றவர்கள் அவரை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.

இம்ரான் கான் முகஸ்துதி மற்றும் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்பும் ஒரு பிரபலம். அவர் கைதட்டல்களைக் கேட்க வேண்டும், அவர் தனது பெயர் ஓங்கி ஒலிப்பதை கேட்க வேண்டும்,

தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஒரு பெரிய சர்வதேச சதியின் ஒரு பகுதி என்று இம்ரான் கான் கூறுவது அவர் கட்டும் கதை, இது ஒரு பி கிரேடு படத்தின் கதைக்களம் போன்றது என கூறினார்.

ரெஹாம் கான் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டல்

இம்ரான் கான் பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது பாகிஸ்தான் பிரதமராகும் அளவுக்கு இம்ரான் கானிடம் "உளவுத்துறை திறமை மற்றும் வேறு எந்த திறனும் இல்லை என டுவிட் செய்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com