

சீயோல்,
உக்ரைன் பதற்றங்களால் அமெரிக்கா திசைதிருப்பப்பட்டுள்ள சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் வேட்பாளர் யூன் சுக்-யோல் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தில் கவனம் செலுத்துவதால், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அல்லது எல்லைக்கு அருகில் உள்ளூர் ஆத்திரமூட்டல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று " என்று தென்கொரியா அதிபர் வேட்பாளர் யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரேனில் தென் கொரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எண்ணெய் விலை உயர்வு போன்ற தென் கொரியப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கங்களைச் சமாளிப்பதற்கும் அவசர நடவடிக்கைகளுக்கு யூன் சுக்-யோல் அழைப்பு விடுத்தார். மேலும் உக்ரைன் நெருக்கடி எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒன்று அல்ல. உக்ரைனில் எஞ்சியிருக்கும் எங்கள் மக்களின் பாதுகாப்பே அவசரமானது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.