டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை


டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 May 2025 12:00 PM IST (Updated: 15 May 2025 12:28 PM IST)
t-max-icont-min-icon

சுட்டுக்கொல்லப்பட்ட இளம் அழகி மார்க்வெஸ்க்கு டிக்டொக்கில் 1 லட்சத்திற்கும் மேற்ற ரசிகர்கள் உள்ளனர்.

மெக்சிகோ,

அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார். இதில் படுகாயமடைந்த வலேரியா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின்னர் பெண் ஒருவர் அந்த லைவை கட் செய்தார்.

அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் பதிவானது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லைவில் பதிவான பெண் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. வலேரியா மார்க்வெஸ்க்கு டிக்டொக்கில் 1,13,000 ரசிகர்கள் உள்ளனர்.

1 More update

Next Story