

சியோல்,
தென் கொரியாவில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் பட்டயக்கணக்காளர் (சி.ஏ.) தேர்வு நடந்தது. தென்கொரியா அளவில் மிகவும் கடினமான இந்த தேர்வில் ஹான் (வயது 34) என்பவர் முதலிடம் பிடித்தார். குறிப்பாக 2-ம் கட்ட தேர்வில் 160 கேள்விகளுக்கு 159 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்து முதலிடம் பிடித்ததால் சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காப்பியடித்ததை அவர் ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். தேர்வறையில் அவர் மறைத்து வைத்திருந்த நுண்ணிய கேமரா மூலம் கேள்விகளைப் படம்பிடித்து, ஏ.ஐ. உதவியுடன் விடைகளைப் பெற்றுத் தேர்வெழுதி யுள்ளதை யூடியூப் சேனல் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரது தேர்ச்சி சான்றிதழை ரத்து செய்யவும், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதத் தடை விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.