பெரிய பாம்புகளை தோளில் சுமந்து நடனம் ஆடிய வாலிபர்

இந்தோனேசியாவில் வாலிபர் தனது தோளில் இரண்டு பெரிய பாம்புகளை சுமந்து நடனம் ஆடிய வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
பெரிய பாம்புகளை தோளில் சுமந்து நடனம் ஆடிய வாலிபர்
Published on

ஜகர்த்தா,

உலகிலேயே மிக பெரிய பாம்புகளாக கூறப்படும் பைத்தான் இன பாம்புகள் 20 அடிக்கும் கூடுதலாக வளர கூடியவை. இவை விஷமற்றவை. ஆனால், தனது எடையை விட பெரிய எடை கொண்ட விலங்குகளையும் இரையாக்க கூடிய திறன் படைத்தவை. சில சமயங்களில் மனிதர்களையும் விழுங்கி விடும்.

ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதிகள், இந்தியா, நேபாளம், வங்காள தேசம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு பாகிஸ்தான், தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தோனேசியா நாட்டில் வாலிபர் ஒருவர் தனது இரு தோளில் 20 அடிக்கும் கூடுதலான நீளம் கொண்ட இரண்டு பாம்புகளை தொங்க விட்டபடியே நடனம் ஆடியுள்ளார்.

அவர் மிக கவனமுடன், பக்கவாட்டில் சென்றபடியே ஆடிய இந்த நடனம் ஒரு சில வினாடிகளே நீடிக்கின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் லைக்குகளையும் வெளியிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com