

மாஸ்கோ,
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரை தொடங்கிய ரஷியா, தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்கான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் உக்ரைன்-ரஷியா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் எதிரொலியாக ரஷ்ய சேனல்களின் விளம்பரத்துக்கான வருவாயை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சமூகஊடக நிறுவனங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்ய சேனல்களின் விளம்பரத்துக்கான வருவாயை தடை செய்துள்ளோம். தங்கள் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் விளம்பர வருவாயை தடை செய்த நிலையில் யூடியூப் நிறுவனமும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.