நான்-ஸ்கிப் வீடியோ விளம்பரங்களின் நேரத்தை அதிகரிக்க யூடியூப் திட்டமா?

யூடியூப்பில் முன்பெல்லாம் ஒரு விளம்பர வீடியோ இடம் பெற்ற நிலையில், தற்போது இரண்டு , மூன்று விளம்பரங்கள் துவக்கமே ஓடுவதை பார்க்க முடிகிறது.
நான்-ஸ்கிப் வீடியோ விளம்பரங்களின் நேரத்தை அதிகரிக்க யூடியூப் திட்டமா?
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றமும் பொழுதுபோக்கும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் யூடியூப் வீடியோ தளம் சிறந்த பொழுதுபோக்கு தளமாக மாறி வருகிறது. ஸ்மார்ட் போன்களில் மட்டுமின்றி தற்போது ஸ்மார்ட் டிவிக்களிலும் யூடியூப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யூடியூப்பை பொறுத்தவரை விளம்பரம் வாயிலாக பெருமளவு வருவாயை ஈட்டி வருகிறது. இந்த விளம்பர வருவாயை கண்டெண்ட் கிரியேட்டர்களிடமும் யூடியூப் பகிர்ந்து கொள்கிறது. இதனால் எந்த ஒரு வீடியோவை திறந்தாலும் முதலில் விளம்பரமே வரவேற்கும். முன்பெல்லாம் ஒரு விளம்பர வீடியோ இடம் பெற்ற நிலையில், தற்போது இரண்டு , மூன்று விளம்பரங்கள் துவக்கமே ஓடுவதை பார்க்க முடிகிறது. அவற்றில் சில வீடியோக்களை ஸ்கிப் செய்யவும் முடியாது.

இந்த நிலையில், ஸ்மார்ட் டிவிகளில் 30 வினாடிகள் ஓடிய பிறகே இவற்றை ஸ்கிப் செய்ய முடியும் நிலை உள்ளது. இனி இந்த விளம்பரங்களின் நீளத்தை 90 வினாடிகளாக மாற்ற யூடியூப் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஏற்கனவே வீடியோக்களுக்கு இடையே ஓடும் இந்த வீடியோக்கள் பயனர்களுக்கு எரிச்சலை கொடுத்து வரும் நிலையில், யூடியூப் எடுத்து இருக்கும் இந்த புதிய வீடியோ பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனினும், இது தொழில் நுட்ப கோளாறாக நடைபெற்று இருக்கலாம் எனவும், இதுபோன்ற எந்த டெஸ்டிங்கிலும் ஈடுபட வில்லை என யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com