ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிப்பு

ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளும் தேசபக்தி முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவர், முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் தாக்குதல்காரர்களால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்துவரும் அரசியல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில், போலீசுக்கு உதவ ராணுவம், விமானப்படை உள்ளிட்டவைகளுக்கு அதிகாரம் அளித்ததாக ஜனாதிபதி எட்கர் லுங்கு கூறினார்.

இதுதொடர்பான தனது அறிக்கையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது காவல்துறையின் தினசரி வேலை, ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு மற்ற பாதுகாப்பு பிரிவுகளின் உதவி தேவை என்று அதில் ஜனாதிபதி எட்கர் லுங்கு தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com