

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்கள் நிறைவடைகிறது. இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல உள்ளார். அதைத்தொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.