ரஷியா மீதான பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை - உக்ரைன் அதிபர்

ரஷியா மீதான பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு எதிராக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்த பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை எனவும், ரஷியா மீது மேலும் அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனின் ராணுவ தொழில்துறை வளாகத்தை தாக்கப்போவதாக கூறிய ரஷிய ராணுவ அமைச்சகத்தின் அறிவிப்புக்கு ஒரு உலக தலைவர் கூட எதிர்வினையாற்றுவதை நான் கேட்கவில்லை. ஆக்கிரமிப்பாளரின் துணிச்சல், ரஷியா மீது விதிக்கப்பட்ட தடைகள் போதுமானதாக இல்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். எனவே மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com