லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு

லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்றார்.
லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு
Published on

பெய்ரூட்,

லெபனான் நாட்டில் பிரதமராக இருந்து வந்த சாத் ஹரிரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் புதிய பிரதமராக பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஹசன் டயப்பை அதிபர் மைக்கேல் அவுன் நியமித்தார். புதிய பிரதமர் ஹசன் டயப் தனது புதிய அரசை நேற்று முன்தினம் அமைத்தார்.

முந்தைய சாத் ஹரிரி அரசில் 30 மந்திரிகள் இடம்பெற்றிருந்த வேளையில், இப்போது ஹசன் டயப்பின் புதிய அரசில் மந்திரிகள் எண்ணிக்கை 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். 5 பேரில் ஒருவரான ஜீனா அகர், ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ளார். இவர் துணைப் பிரதமராகவும் பதவி வகிப்பார். லெபனான் வரலாற்றில் ராணுவ இலாகாவுக்கு பெண் ஒருவர் மந்திரி ஆகி இருப்பது இதுவே முதல் முறை.

புதிய அரசு நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு முடிவு கட்ட வேண்டும், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று முற்போக்கு சோசலிச கட்சி எம்.பி. பிலால் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com