

ஸ்காட்லாந்து,
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக்காட்சிசாலையில் வசந்த காலம் வீச தொடங்கியுள்ளது. ஜென்டூ பென்குயின்கள், தங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தங்களின் சுவாரஸ்யமான 'காதலை தேடிய பயணம் தொடங்கி உள்ளது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குழந்தைகள் மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்த சிறுவர், சிறுமியர் தங்களின் புதுமையான சிந்தனையால் தீட்டிய வண்ணங்கள் கூழாங்கற்களை உருவாக்கியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தக் குழந்தைகள், சாதாரணக் கற்களைக் கூட அற்புதமான வண்ணத்தினால் பென்குயின்களின் காதல் உலகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளனர். மேலும் குழந்தைகள் தங்களின் பிஞ்சுக்கரங்களால் 1,000-க்கும் மேற்பட்ட கூழாங்கற்களுக்கு வண்ணம் தீட்டி, அவற்றை பென்குயின்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளனர்.
எடின்பர்க் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தங்கள் சமுக தளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளது:
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், எடின்பர்க் மிருகக்காட்சிசாலை பென்குயின்களுக்காக வண்ணமயமான கூழாங்கற்களை வரைவதன் மூலம் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளனர் என பாராட்டியுள்ளது. மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அறக்கட்டளைக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
மிருகக்காட்சிசாலைக்கு வரும் பார்வையாளர்கள் ஒரு கூழாங்கல்லை விலைக்கு வாங்கி, அதில் தங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களை ஓவியமாக வரையலாம். நீங்கள் வரைந்த அந்த வண்ணமயமான கல்லை ஒரு பென்குயின் தனது கூட்டிற்காகத் தேர்ந்தெடுத்தால்,உங்கள் கல்லைத் தேர்ந்தெடுத்த அந்த பென்குயின் ஜோடிக்குக் குஞ்சு பிறந்தால், பார்வையாளர் ஒரு குஞ்சுக்கு பெயரிட வாய்ப்பு கிடைக்கும்.
எடின்பர்க் மிருகக்காட்சிசாலையின் நட்சத்திர ஜோடிகளான மிட்டன்ஸ் மற்றும் மஃபின்ஸ் இந்த ஆண்டும் தங்களின் காதலை மீண்டும் பகிர்ந்துள்ளது .இந்த வெப்கேம் வசதி மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் பென்குயின்களின் கூடு கட்டும் அழகை பார்க்க முடியும். இந்த ஆண்டு ஒரு முழுமையான டிஜிட்டல் காதல் திருவிழாவைக் கொண்டாடி வருகிறது.