பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டு: மார்க் சூகர்பெர்க் பதிலடி

பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.
பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டு: மார்க் சூகர்பெர்க் பதிலடி
Published on

வாஷிங்டன்,

பேஸ்புக் டிரம்புக்கு எதிரான கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சுமத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக் அனைத்து தரப்பினரின் சிந்தனைகளுக்கான ஒரு தளம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்க் சூகர்பெர்க், சமூக வலைதளமான பேஸ்புக் அமெரிக்க தேர்தலின் போது நடுநிலயாக இருக்க முயற்சித்தது. மக்களை ஒன்றினைக்க ஒவ்வொரு நாளும் நான் பணியாற்றினேன். அனைத்து மக்களின் குரலையும் அனைவரது கருத்துக்களுக்கான தளத்தையும் அளித்ததாக நாங்கள் நம்புகிறோம்.

பேஸ்புக் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடும். மேலும், தேர்தலுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் தேசிய அரசுகளுக்கு எதிராக பணியாற்றும் என மார்க் கூறியுள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com