இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை

நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல் குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கடலில் வைத்து கைது செய்தது.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை
Published on

பாரிஸ்,

இஸ்ரேல் நாட்டின் உள்துறை பாதுகாப்பு மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-நோல் பரோட் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டார்.

காசாவுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற "குளோபல் சுமூத் புளோட்டிலா" என்ற கப்பல் குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கடலில் வைத்து கைது செய்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com