சுழலும் சக்கரங்கள் துள்ளும் உள்ளங்கள்: ஜப்பானியர்களின் நாற்காலி பந்தயம்

ஜப்பானில் அலுவலக நாற்காலிகளை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த வினோதமான பந்தயம் இசு-1 கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
சுழலும் சக்கரங்கள் துள்ளும் உள்ளங்கள்: ஜப்பானியர்களின் நாற்காலி பந்தயம்
Editor
Published on

டோக்கியோ,

2010-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கடை வீதியில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. இந்த விளையாட்டை உள்ளூர் வணிகத்தை மேம்படுத்தவும், அன்றாட அலுவலக சோர்வில் இருந்து மக்களை உற்சாகப்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த பந்தயம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

ஜப்பானில் உள்ள அலுவலக ஊழியர்கள் வேலையில் பயன்படுத்தும் நாற்காலிகளை வைத்து நடத்தும் போட்டி இதுவாகும். இந்த போட்டியின் ஒரு அணியில் மூன்று நபர் இருப்பார்கள். நகர வீதிகளில் அமைக்கப்பட்ட வளைந்து நெளிந்த பாதைகளில் இந்த பந்தயம் நடக்கும். போட்டியில் பங்கேற்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.

போட்டியாளர்கள் அலுவலக சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, கால்களால் பின்னோக்கி உந்தி தள்ளியபடி குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும். மேலும் அவர்கள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நாற்காலியை தள்ளி செல்ல வேண்டும். இந்த போட்டி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இது கடுமையான போட்டியாகவே இருக்கும்.

ஜப்பானில் அலுவலக நாற்காலிகளை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த வினோதமான பந்தயம் இசு-1 கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜப்பானின் உயர்தர அரிசி மூட்டைகள் பரிசாக வழங்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com