பிரான்ஸ் உடனான தூதரக உறவை முறித்த புர்கினா பாசோ

புர்கினா பாசோவின் இந்த திடீர் முடிவால் பிரான்ஸ் அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிரான்ஸ் உடனான தூதரக உறவை முறித்த புர்கினா பாசோ
Published on

வாகடூகு,

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தங்களது முக்கிய கூட்டாளியாக இருந்த பிரான்ஸ் நாட்டுடன் வலம் வந்த தூதரக உறவை உடனடியாக முறித்துக் கொள்வதாக புர்கினா பாசோவின் ராணுவ அரசு நேற்று அதரடியாக அறிவித்துள்ளது.

“பிரான்ஸ் அரசு தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலை யிட்டு, வன்முறையைத் தூண்டும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசியமாக ஆதரவு அளித்து சதி செய்கிறது" என புர்கினா பாசோ அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

புர்கினா பாசோவின் இந்த திடீர் முடிவால் பிரான்ஸ் அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு ஆதாரமற்ற, பகைமை நடவடிக்கை என்றும், அங்குள்ள தங்கள் நாட்டு அதிகாரிகளின் பாதுகாப்பைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவு சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com