2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் மோக்கா புயல் காரணமாக இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

புதுச்சேரி

தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறியதையடுத்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'மோக்கா' என பெயரிடப்பட உள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில தினங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com