பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் மேலும் 3 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் மேலும் 3 பேருக்கு தொற்று
Published on

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 253 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

3 பேருக்கு தொற்று

அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் 2 பேருக்கும் என மொத்தம் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,654 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,568 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 314 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com